நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மகன் தினேஷ் நல்லசிவன் பிளஸ்-2 முடித்துள்ளார். ரிசல்ட்டுக்காக காத்திருந்ரு தினேஷ் நீட் தேர்வு எழுதவும் படித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தனது தந்தை மாடசாமி மதுப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் தினேஷ் நல்லசிவன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவர் எழுதியிருந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது மதுப்பழக்கத்தை கைவிடுமாறு தந்தைக்கு அவர் உருக்கமான கோரிக்கை விடுத்து இருந்தார். மதுக்கடைகளை மூட மத்திய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தினேஷின் பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது, தினேஷ் தனது பிளஸ் 2 வில் 1024 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதை கேள்விப்பட்டதும் தினேஷின் குடுப்பத்தினர் கதறி அழுதனர்.
நன்கு படிக்கும் திறன் கொண்ட அவர் அவசரப்பட்டு தனது முடிவைத் தேடிக் கொண்டாரே என அவர்களது குடும்பத்தினர் அழுதது அனைவரையும் உருக்குவதாக அமைந்திருந்தது