மாம்பழ சீசன் நிறைவு: வனப்பகுதிக்கு திரும்பும் சாம்பல் நிற அணில்கள்!

anil
திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது. செண்பகத்தோப்பு, இந்த செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியான இந்த பகுதியில் மலைக்கு மிக அருகேயே தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கானக்கான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் அதிகளவு மா விவசாயம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மலைப்பகுதியில் ஆயிரக்காணக்கான வன விலங்குகள் வசித்து வந்தாலும், அதிகளவில் அரிய வகையைச் சேர்ந்த சாம்பல் நிற அணில்கள் வசித்து வருகின்றன. இதனாலேயே இந்த வனப்பகுதியைச் அரசு சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக என அறிவித்தள்ளனர். இந்த அரிய வகை அணில்கள் வனப்பகுதிகளில் உயரமான மரங்களில் கூடு கட்டி வசித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாம்பழம் சீசன் என்பதால் வனத்தை விட்டு அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் உள்ள உயரமான மரங்களுக்கு சென்று மா தோட்டத்திற்கு அருகே வசித்து வந்துள்ளன. தேவைபடும்போது மா தோப்புகளுக்குள் சென்று தேவையான மாம்பழங்களை சாப்பிட்டு விட்டு வந்துவிடும். தற்போது மா சீசன் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் தோப்புகள் அருகே வசிந்து வந்த சாம்பல் நிற அணில்கள் தற்போது மிண்டும் வனப்பகுதிக்கு திரும்பி வந்து கொண்டு இருப்பதாக மலை வாழ் மக்கள் தகவல் தெரிவித்தள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-

‘பெரும்பாலும் வனப்பகுதியில் உயரமான மரங்களில் வசித்து வரும் இந்த அணில்கள் மா தோட்டங்கள் அருகே இருப்பதால் மா தோட்டம் அருகே கடந்த சில மாதங்களாக கூடுகட்டி வசித்து வந்தன. தற்போது மா சீசன் நிநைவடைவதால் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றன. பொதுவாக சாமபல் நிற அணில்கள் இரண்டு கூடுகள் கட்டி வாழும் தன்மை உடையது. இதனால் ஒருகூட்டை வனப்பகுதிகுள்ளும், மற்ற ஒரு கூட்டை தோப்புகள் அமைந்துள்ள பகுதியிலும் அமைத்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Response