கரூரில் இன்று புறா போட்டி துவங்கியது !

pura
கரூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அமரர் இரா.வைரப்பெருமாளின் நினைவாக 48 ஆம் ஆண்டாக புறா போட்டி நடைபெற்றது. இந்த போட்டி இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 13 ம் தேதி வரை நடைபெறுகின்றதுகரூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், சமூக சேவகருமான அமரர் இரா.வைரப்பெருமாள் அவர்களின் நினைவாக அவரது மகனும், கரூர் நகர அ.தி.மு.க செயலாளருமான வை.நெடுஞ்செழியன் ஆண்டு தோறும் புறா போட்டி நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் இன்று 48 ம் ஆண்டு நினைவு புறா போட்டி துவங்கியது. சாதா புறா மற்றும் கர்ணப் புறா போட்டி என்று இரு வித போட்டிகள் நடைபெறும் இந்த போட்டியில் முதல்கட்டமாக சாதா புறா போட்டி இன்று காலை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் துவங்கியது. இந்த புறாப்போட்டியை ஈரோடு மாவட்ட புறா போட்டி சங்க தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார். இன்று துவங்கிய இந்த சாதா புறா போட்டியானது வரும் 23 ம் தேதி வரை மூன்று தினங்கள் நடைபெறுமென்றும், இதையடுத்து கர்ணப்புறா போட்டியானது ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி துவங்கி 13 ம் தேதி வரை மூன்று தினங்கள் வரை நடைபெற உள்ளது என்று புறா போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
pura 3

pura
6 மணி நேரம் தொடர்ந்து பறக்க வேண்டும் என்கின்ற விதியின் கீழ், எந்த புறா அதிகமாக பறக்கின்றதோ அந்த புறாக்கள் தான் போட்டியில் தேர்வானது என்றும் ஒரு புறாவிற்கு ஒரு ஆள் என்கின்ற விதியில் சுமார் 35 க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஏராளமான புறாக்கள் கலந்து கொண்டதோடு, நடுநிலையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Response