அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

kudiyarasu

இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில். பதிவான வாக்குகளை இன்று காலை 11 மணிக்கு எண்ணப்படுகிறது.

அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது இன்று மாலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response