ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகாத்மா காந்தியின் பேரன்…

gobala krishna gandhi_2017_5_6_0
மகாத்மா காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி. இவரது மனைவி, ராஜாஜியின் மகள் லட்சுமி. இந்த தம்பதியின் மகன் தான் கோபால கிருஷ்ண காந்தி. இவர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர்.மேற்கு வங்க கவர்னராகவும் பதவி வகித்தவர்.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 19ம் தேதி முடிவடைகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்., தலைவர் சோனியா ஈடுபட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், கோபால கிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது குறித்து கோபால கிருஷ்ண காந்தியிடம் கேட்ட போது, நான் பொதுவேட்பாளராக போட்டியிடவது ” உண்மை தான், ஆனால், இது குறித்த பேச்சு வார்த்தை இன்னும் துவக்க நிலையில் தான் இருக்கிறது. இதற்கு மேல் இப்போது எதையும் கூற முடியாது,” என, தெரிவித்துள்ளார்.

கோபால கிருஷ்ண காந்தி அல்லது லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் தான் எதிர்க்கட்சிகளின் பரிசீலனையில் உள்ளனர்.

Leave a Response