நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 18 கிலோ சந்தன கட்டை பறிமுதல்!

sandel
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி வழியாக கொல்லிமலைக்கு சந்தன மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களாக தனிப்படை போலீசார் முள்ளுக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு மது விலக்கு ஏடிஎஸ்பி செந்தில் மேற்பார்வையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் முள்ளுக்குறிச்சியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை நடத்திய போது சுமார் 18 கிலோ எடை கொண்ட சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொல்லிமலை, பெரக்கரை நாட்டை சேர்ந்த தனபால்(26), சௌந்தராஜ்(27), சேகர்(36) என்பதும் அவர்கள் கொல்லிமலையில் சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்ய முள்ளுக்குறிச்சி அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் 18 கிலோ சந்தன மரக்கட்டைகளையும், கடத்தி வரப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Response