மனைவிக்கு மாடி தோட்டத்தை பரிசலித்த நடிகர்!

aari
நடிகர் ஆரி நாட்டு விதைகள் மூலம் இயற்கை உரங்களை கொண்டு காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை அன்னையர் தினத்தன்று பள்ளிகரனையில் உள்ள இதய வாசல் முதியோர் இல்லத்தில் மாடிதோட்டம் உருவாக்க அறிவித்து இருந்தார்.

முதியோர் இல்லத்தில் மாடி தோட்ட திறப்பு விழா அறிவித்த படி பள்ளிகரணையில் உள்ள ‘இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் நேற்று 06-07-2017 தன் மனைவி நதியா பிறந்தநாளில் கீரை காய்கறி மாடித்தோட்டத்தை பயண்பாட்டுக்கு அந்த முதியோர் இல்லத்தில் உள்ள விஜயா பாட்டியை வைத்தே திறந்து வைத்தார். மேலும் நாட்டு விதைகள் நாளுக்குநாள் அழிந்தவண்ணம் உள்ளது, தற்போது நம் நாட்டில் 50% மட்டுமே நம் நாட்டின் விதைகள் உள்ளன. மற்றவற்றை எல்லாம் நாமே கலப்பின சேர்க்கையில் அழித்துவிட்டோம். மீதமுள்ள 50% விதைகளையாவது நாம் முறையாக பாதுகாக்க வேண்டும் ஏனெனில் ஒவ்வொரு விதையிலும் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதென்றும், பல வருடங்கள் கழித்து நாம் நம் நாட்டில் என்ன விதைகளை பயன்படுத்தினோம் என்ற சுவடே தெரியாமல் போய்விடும், விதைகளுக்காக நாம் மற்ற நாட்டிடம் கையேந்துகிற நிலை வரக்கூடாது என்ற அவர் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் மாடி வீடுகளிலும் இந்த நாட்டு விதை இயற்கை உணவு முறை மாடி தோட்டம் உருவாக ஊக்குவிக்க உள்ளார்.

இவ்வாறாக ஒவ்வொருவரும் முன்வந்து தங்களது மாடி வீடுகளில் இயற்கை உணவுமுறை நாட்டு விதை மாடித்தோட்டத்தை உருவாக்கினால் நாட்டு விதை அழிவினை தடுக்க முடியும், மேலும் நச்சு உணவுப்பொருட்களிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க இயலும். மேலும் சுற்றுப்புற சூழலை மாசாக்கும் பிளாஸ்டிக் பைகளை வைத்து இத்தகைய மாடித்தோட்டம் உருவாக்கப்படுகிறது.

மாடிதோட்டத்தை மனைவிக்கு பரிசலித்த ஆரி:-

மேலும் அவரது முக்கிய செய்தியாக குழந்தைகளின் பிறந்தநாளில் பெற்றோர்கள் விஷத்தை கெடுகிறார்கள்! கேக் என்ற பெயரில். இதற்க்கு விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாக மாற்றத்தை தன்னிடம் இருந்தே ஆரம்பிக்கும் விதமாக தன் மனைவியின் பிறந்த நாளில் நவதானியன்களால் உருவான கேக்கை உருவாக்கி அதை வெட்டி கொண்டாடினார். இது முற்றிலுமாக கம்பு, பாம், வெல்லம், வெண்ணெய், தயிர், கேரட், ஆப்பிள், முந்திரி, ஆரஞ்சு, ஜாதிக்காய் பொடி, கறுவா தூள், உருளைக்கிழங்கு, ஆயில், தேன், முட்டை, இஞ்சி போன்ற ஆர்கானிக் தானியங்களால் உருவான கேக் உருவாக்கி பிறந்த நாளை கொண்டாடினார். இவ்வாறாக கொண்டாடும் போது பிறந்த நாள் அன்றும் குழந்தைகள் நச்சு உணவு உண்பதை தவிர்க்கலாம் என்கிறார், பிறந்த நாள் கலாச்சாரம் சில வருடங்களாக அதிகரித்து வருவது நல்லதுதான் ஆனால் உடலுக்கு கேடு தரும் கேக் வகைகளை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான கேக் வகைகளை உண்போம் குழைந்களின் பாதுகாப்பினை உறுதி செய்வோம்.

Leave a Response