நாமக்கல்லில் நடந்த கோர சம்பவம்! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

car

நாமக்கல்லைச் சேர்ந்த பிரியா என்ற பெண் மோகனூர்-வேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த கார் பிரியாவின் மீது மோதியது.

கார் மோதிய வேகத்தில் பிரியா அந்தரத்தில் பறந்து பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 இடங்களில் பிரியாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response