அரசுப் பணத்தை செலவழித்து கூட்டம் சேர்த்து வரும் முதல்வர் நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு !

nanjil-sampath14
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்திய அதிமுக இயக்கத்தில். அவரது மறைவை அடுத்து இடையில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இப்போது, அந்தக் கருத்துவேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலமாக சரி செய்யப்பட்டு விரைவில் இரு பிரிவுகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நாஞ்சில் சம்பத்.

இதைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா? துணை முதல்வர் பதவி ஏற்படுத்தப்படுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது, பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பேச்சுவார்த்தை நிறைவடையும் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என முதல்வர் பதிலளித்துள்ளார்.

இரு அணிகளும் இணைப்பு குறித்து முறையான அறிவிப்பு வரும் திங்கள்கிழமை வெளியிடப்படலாம் என்றும் அதிமுகவை வழிநடத்துவதற்காக 17 பேர் கொண்ட குழு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே முறையாக செயல்படவில்லையென்றால் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை மாற்ற நேரிடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அணியினர் எச்சரிக்கை விடுத்தனர். டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், சென்னையில் டிடிவி தினகரன் வீட்டில் நாஞ்சில் சம்பத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் செல்லும் விழாவுக்கெல்லாம் அரசுப் பணத்தை செலவழித்து கூட்டம் சேர்த்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக சட்ட விதிகளை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மாற்றிட முடியாது என்று கூறினார்.
மேலும்,அதிமுகவில் தவிர்க்க முடியாத தலைவர் டிடிவி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Leave a Response