கர்நாடகாவில் கனமழையால் டெல்டா மாவட்ட பகுதி மக்கள் மகிழ்ச்சி !

karnadaga
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 4000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த இரு அணைகளில் இருந்து தலா 2000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் நாளை இரவுக்குள் மேட்டூர் அணைக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ள நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, டெல்டா மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Response