தணிக்கை குழுவை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்!

vishal 2
சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழுவை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுசெயளாளருமான விசால் இன்றைய சூழலில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை சான்றிதழ் பெறுவதை எளிமை படுத்த வேண்டும் என தணிக்கை குழு தலைவர் மதியழகணை சந்தித்த தயாரிப்பு சங்க தலைவர் விசால் தெரிவித்தார்.

திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் தணிக்கை சான்றிதழ்கள் அனுப்புவதால் தான் படங்கள் ரிலிஸ் தேதியை விட்டு தள்ளிப்போகின்றன. அதை தற்போது தவிர்த்து விட்டு படத்தின் ரிலிஸ் தேதிக்கு ஒரு மாதம் அல்லது அதற்கு முன்னதாகவே தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைத்தால் மட்டுமே திரைப்படம் வெளியாகும் போது எந்த வித தடங்களும் இல்லாமல் வெளியாகும். அதன் தொடர்பாக செயல்பாடுகளை கூடிய விரைவில் நடைமுறை படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணமாக தமிழ்திரையுலகம் இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது, இது சினிமா துறைக்கு பெறும் இழப்பு என்றும் தெரிவித்தார். மத்திய அரசாங்கத்திடம் தொடர்ந்து குறைக்க வலியுறுத்தி வருவதாகவும், நடிகர் கமலஹாசனின் கையெழுத்திட்ட கடிதம் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Response