விஜயின் “மெர்சல்” தெலுங்கில் அடிரிந்தி ஆனது!..

Mersal 1
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மெர்சல்’. இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகின்றார். அதோடு இதில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய 3 ஹீரோயின்களும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல்பார்வை இரு தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முதல்பார்வையில், காளைகளுக்கு நடுவே அதை அடக்க தயாராகும் வீரர் போன்று இருந்தது. இந்த முதல்பார்வை, விவசாயிகளுக்கு ஆதரவாக சில தினங்களுக்கு முன் பேசிய விஜய்யின் பேச்சை நினைவுபடுத்துவது போல் உள்ளது.

ஏ.ஆர் ரகுமான் இசையில் பிரமாண்டமாக தயாராகும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் பாடல்கள் வெளியாக உள்ளது. தமிழில் ‘மெர்சல்’ என்ற பெயர் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. இதே போல, தெலுங்கில், ‘அடிரிந்தி’ என்ற பெயரில் வெளியாகப்போகின்றது.

Leave a Response