என்னடா இது பழனிசாமி தலைமையில் 4வது அணியா?????

Edapadi_Palanisamy
அதிமுகவில் தற்போது முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையில் 4வது அணி இருப்பது 2 எம்பி.,க்களின் பேட்டி மூலம் வெளியே வந்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின்னர் அதிமுக அம்மா அணி (சசி), அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி, தினகரன் அணி, தற்போது பழனிச்சாமி அணி என அதிமுக சிதறு தேங்காயாக உடைந்து வருகிறது.

சசி சிறைக்கு சென்ற பின்னர் தினகரன் ஓரம் கட்டப்பட்டார். சிறைக்கு சென்று ஜாமினில் வந்ததும் மீண்டும் கட்சி பணியை துவக்குவேன் என்றார். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆட்சி உங்களுக்கு கட்சி எங்களுக்கு இந்த டீலுக்கு ஓகே சொல்லுங்கள் என வலியுறுத்தினர். இதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் பழனிசாமி மவுனமாகவே இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் கட்சிக்கு எதிராகவே வெளிநடப்பு செய்தனர். இதுவும் பல யூகங்களை எழுப்பியது.

இந்நிலையில் நேற்று ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ., தரப்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதற்கென டில்லி சென்ற தம்பித்துரை நிருபர்களிடம் பேசுகையில்; சிறையில் இருக்கும் சின்னம்மாவின் விருப்பபடியே பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கிறோம். கட்சியின் தலைமை என்றால் எல்லோரும் இணைந்து எடுக்கும் முடிவு தான் என்றார்.

இவரது இந்த பேச்சுக்கு அதிமுகவின் எம்.பி.,க்கள் அருண்மொழித்தேவன் ( கடலூர்), அரி (அரக்கோணம்) ஆகியோர் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் இருவரும் இன்று கூட்டாக நிருபர்களிடம் பேசுகையில்; அதிமுக ஒன்று பட வேண்டும் என்ற முதல்வர் பழனிசாமியின் கருத்தை நாங்கள் ஏற்கிறோம். கட்சி ஒன்றுபட வேண்டும், சிறப்பான ஆட்சி நடத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். கட்சியையும், ஆட்சியையும் பழனிசாமியே தற்போது வழிநடத்துகிறார்.

துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டியில் என்னை போன்ற ஒட்டுமொத்த தொண்டர்களுக்கு எதிரான கருத்தை சொல்லியிருக்கிறார், அவரது கருத்துக்கும் கட்சிக்கும், தொடர்பில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. தம்பித்துரை கண்டபடி பேட்டிகொடுப்பதை நிறுத்த வேண்டும். சசி குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என முதன்மையாக செயல்பட்டவர் தம்பித்துரை. தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவின் அறிவுரையின்படி ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்கிறோம் என கூறியிருப்பது தவறானது.
இது எங்களை புண்படுத்துகிறது. டில்லி வந்தால் ஒரு கருத்தும், தமிழகம் வந்தால் ஒரு கருத்தும் கூறி வருவது சரியல்ல. இவ்வாறு பேட்டி அளித்தனர்.

இன்றைய பேட்டியின் மூலம் அதிமுகவில் 4வது அணி இருப்பது வெளிப்படையாக தெரிய துவங்கி இருக்கிறது. இன்னும் என்ன காட்சியெல்லாம் ஆட்சியிலும், கட்சியிலும் வரப்போகுதோ.

Leave a Response