அதர்வாவின் வாழ்க்கையில் இது முக்கியமான திரைப்படம்…

T Siva GGSR
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் விரைவில் வெளிவரவிற்கும் திரைப்படம் “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்”. இப்படத்தை ஓடம் இளவரசு இயக்க, அதர்வா கதாநாயகனாகவும் அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கசான்றா, பிரணீதா, அதீதி போஹங்கர் என நான்கு நாயகிகள் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா மற்றும் அவருடைய நண்பர்கள் பத்து பேருடன் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துள்ளனர். சிவா அவர்கள் இப்படத்தை பற்றி தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது கீழே வருமாறு:

“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தை முதன் முறையாக பார்த்தேன். இந்த படத்தை தயாரித்தது பெருமையாக உள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை எந்த வித குறையும் சொல்ல முடியாத ஒரு படம் என்பது எனக்கு மிக மகிழ்ச்சி. இந்த படத்தை யார் பார்த்தாலும் எந்த குறையும் சொல்ல முடியாது. என்னுடன் இந்த படத்தை 10பேர் பார்த்தார்கள் அவர்கள் அனைவரும் இப்படத்தின் நிறையை மாட்டும் தான் கூறினார்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். முக்கியமாக கேமரா மேன் சரவணன் இப்படத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவருக்கு இது பெயர் சொல்லும் படமாகவும் , நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் படமாகவும் இருக்கும்.

இந்த படத்தை போன வேகமே தெரியாமல் போகும் படி எடிட் செய்தவர் எடிட்டர் பிரவீன். இப்படம் ஓடக்கூடிய நேரம் 2மணி நேரம் 14 நிமிடம் என்பது இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாகும். இப்படம் அடைய போகும் வெற்றிக்கு இது முக்கிய காரணமாகும். இதை சரியாக செய்த எடிட்டர் பிரவீனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். படத்தில் ஒவ்வொரு பிரேமும் அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம் கலை இயக்குநர் வைரபாலன். மிக குறைவான செலவில் தரமான படத்தை தந்துள்ளார். இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும். ஏற்கனவே சிங்கிள் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கதையோடு பயணித்து அவர் பாடல்களை தந்துள்ளார் என்பது படத்தை பார்க்கும் போது நமக்கு தெரிகிறது அவருக்கு நன்றி. படத்துக்கு விஷ்வல் பீலிங்கோடு பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் யுகபாரதிக்கு நன்றி.இப்படத்தில் நடித்த நான்கு கதாநாயகிகளுக்கும் இப்படம் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும்.

இப்படம் நடிகர் சூரியின் வாழ்க்கையில் அவருக்கு மிகமுக்கியமான படமாக இருக்கும். சூரி எடுத்துக்கிட்ட பொறுமை அவருடைய கடமையை சரியாக செய்தது , அவருடைய கெட்டப் மற்றும் டப்பிங்கில் அதிக கவனம் செலுத்தி அவர் செய்துள்ள வேலை என்று எல்லாமே இந்த படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமையும். நான் ஏற்கனவே கூறியது போல் அதர்வாவுக்கு நல்ல படத்தை கொடுத்துள்ளேன். அதர்வாவுக்கு நல்ல படம் கொடுப்பேன் என்று ஒரு மேடையில் கூறி இருந்தேன். அதே போல் இந்த படம் அதர்வாவுக்கு சிறப்பான படமாக அமைத்துள்ளது. நண்பன் முரளிக்கு எப்போதும் நான் கடமைபட்டுள்ளேன். கண்டிப்பாக அதர்வாவின் வாழ்க்கையில் இது முக்கியமான திரைப்படம். இது வரை அதர்வா நடிப்பில் வெளிவந்த படங்களில் இதில் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இப்படி ஒரு அதர்வாவை இது வரை இந்த உலகம் கண்டிருக்காது. நிச்சயமாக என் நண்பன் முரளிக்கு பெருமையான படமாக இது இருக்கும். இந்த கதை கேட்க, நான் தயாரிக்க முக்கியமான காரணம் பிக் பிரிண்ட் கார்த்தி தான். அவர் தான் இயக்குநர் இளவரசை என்னிடம் கூட்டி வந்து இந்த கதையை என்னை கேட்க வைத்தார்.

இந்த படத்தை நாங்கள் தயாரிக்கும் போது எங்களோடு ஆரம்பத்தில் இருந்து எங்களோடு இருந்த 2MB ரகு மற்றும் சந்திரன் ஆகியோருக்கு நன்றி. இந்த படம் தயாராக எல்லா வகையிலும் என்னோடு இருந்த சகோதரன் தீலிப்புக்கு நன்றி. அவருக்கு இது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அவருக்கு நன்றி. இந்த படத்தின் தயாரிப்பில் எங்களோடு வேலை பார்த்த மகேந்திரன் மற்றும் டீமுக்கு நன்றி. அவரை பற்றி சொல்லுவது என்னை பற்றி நானே சொல்லுவது போல் ஆகிவிடும்.அவருக்கு நன்றி. திரையுலகில் நான் எத்தனையோ பேரை அறிமுகம் செய்துள்ளேன். அதில் இப்படத்தின் இயக்குநர் ஓடம் இளவரசுவை அறிமுகம் செய்தது எனக்கு மிகப்பெரிய பெருமையாகும். அவர் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய பரிசு. அவரை எங்களுக்கு சொன்னது போலவே இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார், இது முழுக்க முழுக்க முழுமையான இயக்குநரின் படைப்பு என்று நான் கூறுவேன். இயக்குநர் பாக்கியராஜுக்கு இருந்தது போல் இவருக்கும் தனியாக ஒரு ஸ்டைல் உள்ளது. படத்தில் பணியாற்றிய என்னுடைய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” இவ்வாறு டி.சிவா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response