ஊர்வலமாக வந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தாம்பரத்தில் கைது…

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற கோரி சென்னைக்கு ஊர்வலமாக வர முயன்ற “தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி” உறுப்பினர்களை போலீசார் தாம்பரத்தில் கைது செய்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ் மாநில குழு சார்பில் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், சாதி மறுப்பு தம்பதியினரை பாதுகாத்திட சென்னை உயர்நீதி மன்ற வழிகாட்டல்களை நடைமுறைபடுத்தவேண்டும் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதியுடன் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவுகளை உருவாக்க வேண்டும் தற்காலிக புகழிடம், பாதுகாப்பு மறுவாழ்விற்கு அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுருத்தி கடந்த 9ந்தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னை வரை 360 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளபட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுசெயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் 70க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இந்த நடைபயணத்தை மேற்கொண்டனர்.

இவர்கள் நேற்று தாம்பரம் வந்தனர். தாம்பரத்தில் இருந்து சென்னைக்கு செல்ல காலை புறபட்டனர். அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து இருந்தனர். காவல்துறை தடையை மீறி சென்னைக்கு ஊர்வலமாக செல்வோம் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித்து இருந்தனர். இதனையொட்டி தென் சென்னை இணை ஆணையர் அன்பு தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் தாம்பரம் பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டதோடு நடை பயணம் மேற்கொள்பவர்கள் தொடர்ந்து செல்லாமல் இருக்கு பலவ்வேரு தடுப்பு ஏற்பாடுகளும் செய்யபட்டது. காலை சுமார் 9.30 மணியளவில் சென்னைக்கு பயணத்தை தொடங்க தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் கோஷமிட்டபடி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரண்டனர். மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அங்கு உடன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்: தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகள், தீண்டாமை கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது, இவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்க தனி சட்டம் அமைக்க கோரி இவர்கள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் சென்னைக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்து தடுக்கின்றனர். ஜனநாயக பூர்வமான இயக்கத்திற்கு போலீசார் அனுமதியளிக்காததை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.

தீண்டாமை கொடுமை ஒழிக்கபடவேண்டும் என்பது அரசியல் சட்டத்திலே உள்ள சரத்து. அந்த சரத்தை அமுலாக்குவதற்காக நடைபெறகூடிய இந்த ஊர்வரத்தை, ஜனநாயக பூர்வமான நடவடிக்கைக்கு அனுமதி மறுப்பதென்பது கண்டிக்கதக்கது. காவல்துறையின் இந்த செயலை மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வண்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக சாதி ஆணவத்தை தடுக்க வேண்டும் என்று சொல்கிற போது மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியாக இருந்தாலும் சரி சாதி மறுப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். சுட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் 2016க்கு முன்னர் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் சவுந்திராஜன் சரி ஆணவ கொலையை தடுப்பதற்காக தனி நபர் மசோதாவை முன் மொழிந்தார்.ஆனால் அன்று அது ஏற்று கொள்ளப்படவில்லை இன்று சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கிறது நான் முதலமைச்சர் ,எதிர்கட்சி தலைவர் உட்பட அனைவரையும் கேட்டு கொள்கிறேன் இந்த சட்டமன்ற கூட்ட தொடரிலேயே சாதி ஆணவ கொலையை தடுத்திட சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.

இதன் பின்னர் ஊர்வலமாக சென்னைக்கு ராமகிருஷ்ணன் தலைமையில் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிருத்தினர். இதனால் போலீசாருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து தள்ளியதால் இருதரப்பினருக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடும் போராட்டத்திற்கு பிறகு போலீசார் தடையை மீறி சென்னைக்கு செல்ல முயன்றவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் தாம்பரத்தில் பெரும் பரபரப்பு நிலவியதோடு ஜி.எஸ்.டி சாலையில் பலத்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
DSC_3505

DSC_3612

DSC_3661

Leave a Response