இனி ஆம்புலன்ஸில் செல்ல ஆதார் கட்டாயம்…

aadhar
ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறது.

வங்கி கணக்கு தொடங்குதல், வருமான வரி செலுத்துதல், பான் அடையாள அட்டை, செல்போன் இணைப்பு பெறுதல் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நோயாளிகள் ஆம்புலன்சில் செல்ல வேண்டுமானால் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இருந்தால்தான் அரசின் இலவச ஆம்புலன்சில் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் தேவைபடும் நோயாளியின் ஆதார் அட்டை அல்லது உறவினரின் ஆதார் அட்டையை காண்பித்தால் தான் ஆம்புலன்சில் ஏற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்தி முறைகேடுகள் நடக்கிறது. இதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தின் இந்த உத்தரவால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கிராமப் புறங்களில் ஏராளமான மக்கள் இன்னும் ஆதார் அட்டை பெறவில்லை.

இதனால் அவர்கள் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்சில் செல்ல ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Response