ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், மணமகனுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக கொடுத்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஹிம்மத் சிங் – பிரீதி குன்வார் இடையே திருமணம் உறவினர்கள் புடைசூழ வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பிரீதியின் தந்தை, மணமகன் ஹிம்மத் சிங்கிற்கு, ஆம்புலன்ஸ் வாகனத்தை வரதட்சணையாக வழங்கினார்.
இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை, தங்களது உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தங்களது கிராமத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்களுக்காக பயன்படுத்த இருப்பதாக ஹிம்மத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.