மத்திய அரசு திட்ட வட்டம்: ஆதார் இறுதிக் கெடு ஜூன் 30க்கு இனிமேல் நீட்டிக்க முடியாது…

aadhar-card
நம் மக்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதார் பெற்று கொண்டு வரும் இந்நிலையில் கிட்டத்தட்ட முடிவு பெறவுள்ளதால் மத்திய அரசு இறுதிக் கெடு விடுத்துள்ளது. அதாவது ஜூன் 30க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆதார் அட்டையை கொண்டு வந்தது. அடுத்து வந்த மோடி அரசு ஆதார் அட்டை அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் கட்டாயமாக்கியது.
சமையல் காஸ் மானியம் பெறுவதற்கு, ரேஷன் கார்டு பெற வருமான வரி தாக்கல் செய்ய, ‘பான்கார்டு’ பெற, புதிய வாகனங்கள் பதிவு செய்ய, வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்புக்கு, டிரைவிங் லைசென்ஸ் என அனைத்துக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி இருக்கிறது.

பள்ளிகளில் மதிய உணவு, விவசாயிகளுக்கு மானிய விலை உரம் தருவதற்கு என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என கேட்கப்பட்டு வருவதால், இதை எதிர்த்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தொடரப்பட்டது. அதை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெற, ஆதார் அட்டை என்பது விருப்பத்தின் அடிப்படைதான், கட்டாயமாக் கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு ஆதார் அட்டை அரசின் திட்டங்களைப் பெற கட்டாயமாக்கி சட்டமியற்றியது. இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர சாந்தா சின்ஹா சார்பில் , அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மத்தியஅரசு கட்டாயப்படுத்துவதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிடுகையில், ‘ அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை விருப்பத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும், அரசு, அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி வருகிறது.

குறிப்பாக மாணவர்கள் கல்வி உதவித்தொகை, மதிய உணவு உள்ளிட்டவைகளுக்கு கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், 2 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தும் வாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
விசாரணை ஒத்திவைப்பு

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எல்லாம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்ததுதான், ஆதலால், 2நீதிபதிகள் விசாரணை செய்யக்கூடாது என்றார். இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது முத்லாக் விவகாரத்தை விசாரணை செய்து வருகிறது. அதே அமர்வு இந்த மனுவை வரும் 17ஆம் தேதி விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு சென்று சேர்வது தவிர்க்கப்படும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஆதார் அட்டையுடன், பான் கார்டையும் இணைப்பது தொடர்பான விவகாரத்தையும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வாதாடினார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இது தொடர்பான அடுத்த விசாரணையை வரும் ஜூன் 27ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

Leave a Response