பிரபல நடிகர் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்…

Divya Sathyaraj
சென்னையில் திவ்யா என்ற ஒரு பெண்மணி ஊட்டச்சத்து ஆலோசகராக இருக்கிறார். சென்னையில் திவ்யா வைத்திருக்கும் ஊட்டச்சத்து ஆலோசனை மையத்துக்கு இரு நாட்களுக்கு முன்பு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்மணி வந்துள்ளனர். அவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள், மற்றொருவர் இந்தியாவை சேர்ந்தவர். திவ்யாவின் ஆலோசனை மையத்திற்கு வருகைத்தந்த மூவரும், தாங்கள் ஒரு மருந்து நிருவனத்திலிருந்து வருவதாக கூறியுள்ளனர். திவ்யா அவர்களிடம் குறிக்கிட்டு தான் வைட்டமின், சத்து பானம், ஊடச்சத்துகான பண்டங்கள் ஆகியவற்றை தான் தான் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மருந்து நிருவனத்தில்லிருந்து வந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்துள்ளது மல்டி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கொழுப்பை குறைக்ககுடிய மருந்துகள் என தெரிவித்துள்ளனர். மருந்துகளை வாங்கி பார்த்த திவ்யா அதில் குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள பொருட்களின் விவரங்களை படித்து தான் நடுங்கியதாக தெரிவிக்கிறார். அந்த மருந்துகளில் செர்கப்படுள்ள பொருட்களில் “ஹைபர்விட்டமினோசிஸ்” என்ற உடல்நல கேடு விளைவிக்கும் அளவிலான அதிக வைட்டமின்கள் அடங்கியிருந்ததாக சொல்கிறார். “ஹைபர்விட்டமினோசிஸ்” என்ற உடல்நல குறை ஏற்பட்டால், குமட்டல், மங்கலான கண்பார்வை, வீங்கிய கல்லீரல் போன்ற குறைகள் ஏற்படலாம் என திவ்யா தெரிவிக்கிறார். இந்த மருந்துகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும், அது மட்டுமின்றி அறிவியல் தரம் பெறாத மருந்துகளை தான் பரிந்துரைப்பதில்லை எனவும் அந்த அமெரிக்க மருந்து ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார் திவ்யா.

திவ்யாவின் பிடிவாதத்தை பார்த்த அந்த மூவரும், திவ்யாவிற்கு லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளனர். உடனடியாக திவ்யா அவர்களை தன்னுடைய ஊட்டச்சத்து மையத்திலிருந்து வெளியேற சொல்லியுள்ளார். திவ்யாவின் இந்த கோபத்தை கண்ட அந்த மூவரும், தங்களுக்கு இந்தியாவில் அரசியல் செல்வாக்கு அதிகமிருப்பதாகவும் இதே மருந்துகளை மும்பையில் வேறு எதாவது பிரபல ஊட்டச்சத்து ஆலோசகர் மூலமாக இந்த மருந்தை பிரபல படுத்தவும், விற்கவும் முயல்வோம் என அவர்கள் திவ்யாவிடம் தெரிவித்துள்ளார். திவ்யாவின் முழு பெயர் திவ்யா சத்யராஜ். இவர் நடிகர் சத்யராஜின் மகளாவார்.

இந்த உரையாடல்கள் நடந்தது ஒரு மாலை நேரமாம். அப்போது திவ்யாவும் அவருடைய உதவியாளர் பெண்மணி மட்டுமே இருந்துள்ளனர். திவ்யா அவர்களை தன்னுடைய ஆலோசனை மையத்தை விட்டு வெளியேற சொன்னவுடன், அவர்களுக்கு கோபம் அதிகமாகி திவ்யாவிடம் எதிர்த்து குரல் எழுப்பியுள்ளனர். “ வெளிநாட்டினரை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்பது உங்களை போன்ற இந்தியர்களுக்கு தெரியாதா? வெளிநாட்டினரை இவ்வாறு அவமதிக்கலாமா? நீங்கள் நெறி முறையற்றவர்கள்…எங்களுக்கு இந்தியாவில் அரசியல் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது” என்று மிரட்டும் தோரணத்தில் எச்சரித்துள்ளனர்.

இந்த மிரட்டல் சம்பந்தமாக, திவ்யா சத்யராஜ் விரைவில் காவல் துறையினரிடம் புகார் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response