இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் திமுக செயல்தலைவர்…

stavidya
மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலித்தா அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக திரு ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார் பின்பு கட்சி இரண்டாக பிளவுற்றது. பின்னர் சசிகலா தரப்பினர் ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கை மாறியதாக செய்திகள் வெளியானது.

இதுபற்றி மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேட்டியளித்ததாக ஒரு ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த பிரச்சனையை சட்டசபையில் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் வற்புறுத்தி வருகிறார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

ஆதாரம் இல்லாமல் எதைப் பற்றியும் சபையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார்.
stalin cd
இதனால் நேற்று ஆதாரத்தை தர தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் சபையில் அது அனுமதிக்கப்படவில்லை.

இதனால் வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் பணம் கைமாறியதற்கான உரையாடல் அடங்கிய சி.டி.யை நிருபர்களிடம் காண்பித்து பேட்டி அளித்தார். தேவைப்பட்டால் கவர்னரையும் சந்திப்பதாக கூறினார்.

இந்த சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று மாலை சென்னை வருகிறார். அவரை மு.க.ஸ்டாலின் சந்தித்து எம்.எல்.ஏ.க்கள் பண பேரம் விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை புகாராக கொடுக்க உள்ளார்.

Leave a Response