28 % ஜி.எஸ்.டி. வரி, சினிமா டிக்கெட் விலை உயர்வு: விஜயகாந்த்…

vijayakanth
திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும், பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் வியாபாரிகள் விழி பிதுங்கி நிற்பதாக தெரிவித்தார்.

புதிய வரிச்சுமையால் பல தரப்பினரும் இன்னலுக்கு ஆளாவர்கள் என்று விஜயகாந்த் சுட்டிகாட்டியுள்ளார். அதிகபட்ச வரி விதிப்பால் திரைப்பட தொழிலை விட்டு விடும் நிலை ஏற்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Leave a Response