யாருடனும் கூட்டணி இல்லை, தனித்து போட்டி – சரத்குமார் அதிரடி..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட ஒருசில நடிகர்கள் தற்போது அரசியலில் குதித்துவரும் நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து 11 வருடங்களாக அரசியல் செய்து வருபவர் நடிகர் சரத்குமார்.

அதிமுக, திமுக என மாறி மாறி கட்சியில் இருந்த அவர் தனிக்கட்சி ஆரம்பித்தவுடனும் இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்தார்.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்ட சரத்குமார், விஜயகாந்த் கட்சி உள்ளிட்ட ஒருசில கட்சிகளை ஒருங்கிணைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி, ஜனவரி முதல் 234 தொகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும் சரத்குமார் அறிவித்துள்ளார்.

Leave a Response