கஜா புயலுக்காக விஜயகாந்த் ரூபாய் 1 கோடி மதிப்பில் பொருளுதவி..!

தமிழகத்தில் சமீபத்தில் கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளை மோசமாக பாதித்துள்ளது.

பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் டெல்டா பகுதிகளுக்கு உதவி வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதற்கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டத்தில் மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இரண்டாம் கட்டமாக, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, தேதிமுக சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் ஓரிரு நாளில் வழங்கப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

Leave a Response