பிளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 6ன் விலை இவ்வளவு தான்…

iphone 6
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 6 சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தந்தையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 6 (16 ஜிபி) ரூ.21,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு விற்பனை இன்று (ஜூன் 8) துவங்கி ஜூன் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக ஐபோன் 6 ரூ.24,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது.
ip2
தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்க முடியாதவர்களுக்கு வட்டியில்லா தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.3,667 செலுத்தி ஐபோன் 6 வாங்க முடியும். இத்துடன் எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ.15,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

பிளிப்கார்ட் அறிவித்துள்ள சிறப்பு தள்ளுபடி தற்சமயம் ஸ்பேஸ் கிரே மாடலுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஐபோன் 6 ஆப்பிள் A8 சிப்செட் கொண்டு இயங்குகிறது. 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளத்தை இயக்கும் வசதியும் கொண்டுள்ளது.
ip
ஐபோன் 6 சிறப்பம்சங்கள்:-

* 4.7 இன்ச், ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே
* ஐஓஎஸ் 9, ஐ.ஒ.எஸ். 11 அப்டேட் வழங்கப்படுகிறது
* ஆப்பிள் ஏ8 பிராசஸர்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 1 ஜிபி ரேம்
* 8 எம்பி பிரைமரி கேமரா
* 1.2 எம்பி செல்ஃபி கேமரா
* 4ஜி, 3ஜி, வை-பை, ப்ளூடூத் 4.0
* 1810 எம்ஏஎச் பேட்டரி

ஐபோன் 6 ஸ்பேஸ் கிரே மாடல் ஜூன் 10-ந்தேதி வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் நிலையில், ஐபோன் 6 (16ஜிபி) சில்வர் மாடல் ரூ.36,990 மற்றும் கோல்டு ஃபினிஷ் கொண்ட ஐபோன் 6 (64 ஜிபி) மாடல் ரூ.62,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Response