விவசாயிகள் போராட்டம்: சுங்கச்சாவடியில் பணம் கொள்ளை…

mandsar
மத்திய பிரதேச மாநிலத்தில் மாண்ட்சார் என்ற இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த துப்பாக்கி சூட்டில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.அதுமட்டுமல்லாது பல வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில் மாண்ட்சாரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் அந்த சுங்கச்சாவடியில் உள்ள 8 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Leave a Response