என்னது தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளமா…

thoothu
தலைப்ப பார்த்ததும் எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் வாங்க முழுசா படிச்சி என்னனு தெரிஞ்சிப்போம்.

ஜி சாட் செயற்கை கோளுடன் இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3டி1 ஹரிகோட்டை ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மகேந்திர கிரி இஸ்ரோவின் திரவ எரிபொருள் உந்தும வளாக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் சென்றிருந்தார். அங்கிருந்து மகேந்திரகிரி திரும்பவதற்காக தூத்துக்குடி வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது,

“ஜி சாட் 19” செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி மார்க் 3டி1 வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ வரலாற்றில் இது ஒரு சிறப்பு மிக்க நாள். முதல் முயற்சியிலேயே வெற்றி அடைந்துள்ளது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரியோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்பட கூடியது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

இந்த செயற்கைகோள் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து 3 நாட்களில் விண்ணில் நிலை நிறுத்தப்படும். பின்னர் அது முழுமையாக செயல்பட தொடங்கும். கிரியோஜெனிக் தொழில் நுட்பத்தில், செயல்பட கூடிய இந்த ராக்கெட்டில் சுமார் 4 டன் எடை வரையுள்ள செயற்கை கோள்களை விண்ணில் எடுத்து செல்ல முடியும்.

இதை 6 டன் வரை விண்ணுக்குக் கொண்டு செல்லும் கிரியோஜெனிக் தொழில் நுட்பம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இந்த தொழில் நுட்பம் இஸ்ரோ சின் என்ற சுத்தகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் மூலம் இயக்கப்பட உள்ளது.

இதற்கான ஆய்வு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடியும். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள, குலசேகரன்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. என்று அவர் தெரிவித்தார்.

Leave a Response