பறவைகள் சரனாலயமான வேடந்தாங்கல் மூடப்பட்டதா ஏன்???

BIRDS-1
தமிழகத்தின் மிகப்பெரிய சரனாலயமான வேடந்தாங்கல் சரணலாயத்தில் கழுத்தும் வெய்யிலின் காரணமாக வறட்சி ஏற்ப்பட்டுள்ளது. இங்கு நீர் வற்றியதால் பறவைகள் இறை தேடும் இடங்களும் வறண்டு போயின.
இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் ஏமாற்றம் அடைந்தன, இதுவரை 22,000 பறவைகள் மட்டுமே வேடந்தாங்கலுக்கு வந்து சென்றுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியா, சைபீரியா, பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 26 வகையான பறவைகள் வருவது வழக்கம். பருவமழை பெய்யும்போது, பறவைகள் இங்கேயே கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து, அதற்கு பறக்க கற்றுக்கொடுத்து அதன்பிறகு தனது சொந்த நாட்டுக்கு புதிய குடும்பத்தோடு பறவைகள் பறந்து செல்லும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் பறவைகள் வரத்தொடங்கிய நிலையில், செப்டம்பர் மாதம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் வேடந்தாங்கல் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள குளங்கள் நீரின்றி வறண்டன. இதனால், வேடந்தாங்கலுக்கு வந்த வெளிநாட்டு பறவைகள் ஜனவரி மாதத்தில் தங்களது நாடுகளுக்கு திரும்பின. அதன் பிறகு சரணாலயத்தில் உள்ள பறவைகளை கணக்கிடும்போது, 22,000 பறவைகள் மட்டுமே தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிட்டதால், சரணாலயத்திற்கு வரும் பார்வையாளர்களின் வருகையும் குறைந்துவிட்டது. இதனால், நாளை ஜூன் 1ஆம் தேதியுடன் பறவைகள் சரணாலயத்தை மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனி வருகிற அக்டோபர் மாதம் பருவமழையின் போது, பறவைகளின் வரத்தை பொறுத்து பறவைகள் சரணாலயம் மீண்டும் திறக்கபப்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Response