இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்…

tobacco
உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த புகையிலை எதிர்ப்பு நாளானது, கடைபிடிக்கப்படுவதன் நோக்கம், புகையிலை சாப்பிடுவதாலும், புகைப்பதாலும் நேரக்கூடிய உடல்நலக் குறைவுகளைத் தெரிந்து கொள்ளவும், அதிலிருந்து விடுபட மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அளிக்கவும் ஆகும். இதே போல உலக சுகாதர நிறுவனத்தால், (WHO) எய்ட்ஸ் தினம், மன நல நாள், இரத்த தான தினம், புற்றுநோய் தினம் ஆகியவை உலகில் மக்களுக்கு ஏற்படும் சிக்கலான நோய்களிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வரிசையில், முதன்முதலில் புகையிலை எதிர்ப்பு நாள், ஏப்ரல் 7ஆம் தேதி, 1988ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் 40வது ஆண்டு விழாவின் போது கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும் மே 31ஆம் நாள் புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்த நாளின் நிகழ்ச்சிகளும், வலியுறுத்தல்களும், மக்களை புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கவோ, அல்லது முற்றிலுமாக விட்டுவிடவோ, ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது.

நிகோடினால் ஏற்படும் மூளைப் பாதிப்புகள் மேலும் பல போதைப் பொருட்களை எடுப்பதற்கு மூளையைத் தயார்ப்படுத்துகிறது. இந்த நிலையானது முற்றி, சாப்பாடு, தண்ணீரைப் போல மூளை, நிகோடினும் அவசியமான தேவை என்ற தவறான செய்தியாக உடலுக்கு அனுப்புகிறது. நிகோடின் அடிமைத் தனத்திலிருந்து, வெளிவரும் பல்வேறு வழிமுறைகளை புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக பிரபலப்படுத்துவதே உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கமாகும். அரசு, தனியார் மற்றும் தன்னார்வ நிறுவனங்களால், அதிகமான எழுச்சியோடு எதிர்பார்க்கப்படும் ஒரு நாளாக அமைகிறது, உலக புகையிலை எதிர்ப்பு தினம். புகையிலை சிகரெட், பீடி, குட்கா, மூக்குப்பொடி, போன்றப் பல வகைகளில் உட்கொள்ளப்படுகிறது.

மாரடைப்பு, பக்கவாதம், இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட இருமல் மற்றும் பல ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக புகையிலை உட்கொள்ளுதல் அமைகிறது. புகையிலைப் பழக்கத்திலிருப்பவர்களை சிறந்த முறையில் மீட்டு, புகையிலைக்கு எதிரானப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இந்தப் புகையிலை எதிர்ப்பு தினம், வருடந்தோறும் ஒரு செம்பொருளோடு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2017ஆம் ஆண்டுக்கான செம்பொருளாக, புகையிலை ஒரு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் கொண்டாடப்பட இருக்கிறது. உலக முழுவதும் வருடத்திற்கு 70 லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தினால் பலியாகின்றனர். புகையிலைப் பயன்பாட்டை தற்போது இருப்பதை விட 20% குறைத்தாலே, கிட்டத்தட்ட முன்கூட்டியே ஏற்படும் 100 இறப்புகளையாவது 2020க்குள் தவிர்க்க முடியும் என ஆய்வு கூறுகிறது. புகையிலைக்கு எதிரான விளம்பரங்களை ஒளிப்பரப்புவதன் மூலமாகவும், புகையிலை வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் கொண்டு வருவதன் மூலம் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது சாத்தியமே என உலக சுகதார நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Response