வைகோவுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்…

vaiko6
கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது, தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நீடித்து வருவதால், உடனடியாக விசாரணையை நடத்தும்படி வைகோ கோரிக்கை விடுத்தார். மேலும் தானே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்த வைகோ, தன்னைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படியும், இதன்மூலமாக, வழக்கு முடிவுக்கு வரும் எனவும் கூறினார்.

இதன்பேரில், கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதியன்று, வைகோ கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்குச் சென்று, 50 நாட்கள் நிறைவஇடைந்துள்ளன.இந்தநிலையில் ஜாமீன் கேட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வைகோ சார்பாக, நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் வைகோவின் மனு சைதாப்பேட்டை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வைகோ ஜாமீன் மனு மீது தமிழக அரசு தரப்பில் எந்தவித ஏதிர்ப்பு தெரிவிக்கப்பட வில்லை. எனவே சைதாப்பேட்டை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வைகோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Leave a Response