தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது – வைகோ..!

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்திருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நீட் தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், இந்த முறைதமிழகத்தில் உள்ள 14 நகரங்களில் தேர்வு மையங்களை சிபிஎஸ்இ அமைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மதுரையில் உள்ள 6 தேர்வுமையங்கள் உள்பட நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் மாற்றப்பட்டிருப்பதாக வைகோகுற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்களை திடீரென மாற்றி உள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்ததுடன், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சாடியுள்ளார். இது, மருத்துவப் படிப்புகளில் தமிழக மாணவர்களை தேர்வு எழுத முடியாமல்வெளியேற்றுவதற்கான சதியோ என்றுதான் சந்தேகம் எழுகிறது என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் இது போன்றகுளறுபடிகளை தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Response