பிரதமர் வாழ்த்திய தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி…

vaishali
சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் 9 சுற்றுகளில் விளையாடிய தமிழகத்தின் வைஷாலி 7 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனார். மற்றொரு இந்திய வீராங்கனையான பத்மினி 7 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஆடவர் பிரிவில் தமிழக வீரரான அரவிந்த் சிதம்பரம் 7 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து இந்தியப் பிரதமர் மோடி, ட்விட்டர் பக்கத்தில் வைஷாலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வைஷாலியின் சாதனைக்கு நாடு பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

Leave a Response