ஆதாரம் ஆகிவரும் வாட்சப் புளூடிக்: டெல்லி கோர்ட்…

blutik
வாட்சப்பில் மெசேஜை படித்தவுடன் அது புளூடிக் ஆக மாறிவிடும். புளூடிக் வந்த மெசேஜ்களை, நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளமுடியும் என்று கோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.

தலைநகர் டில்லியில், ஜானக்புரியை சேர்ந்த குடும்பம், சொத்து பங்கீடு தொடர்பாக, மகளுக்கு தந்தை வாட்சப்பில், அதுதொடர்பான விளக்க நோட்டீசை அனுப்பியுள்ளார். மகளும், அந்த நோட்டீசை, படித்திருந்ததால், அது உடனே புளூடிக் ஆக மாறியது. ஆனால், தனக்கு அந்த நோட்டீஸ் வரவில்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்தார். இதனிடையே, அப்பெண்ணின் தந்தை, நோட்டீஸ் படித்ததற்கான புளூடிக் கொண்ட திரையை ஸ்கிரீன்சாட் எடுத்து அதனையே ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப்பித்தார். டில்லி ரோகினி கோர்ட் நீதிபதி அதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைகளுக்காக, சமூக வலைதளங்களான வாட்சப், இமெயில் போன்றவைகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்து, டில்லி ஐகோர்ட், கடந்த 4ம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response