பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை…

Children-Mobiles
நம் வருங்கால பெற்றோர்கள் எல்லாரும் தனது குழந்தைகளிடம் நேரம் செலவிட மாற்றங்க. அக்குழந்தைகளும் கார்ட்டூன் , ஸ்மார்ட்போன் அதில் அடிமையாகி விடுகிறார்கள். அதின் உச்சகட்டமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது பெங்களூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் எப்போதும் ஸ்மார்ட் போன் எனப்படும் நவீன வசதிகள் கொண்ட செல்லிடப்பேசியில் தினமும் அதிக நேரத்தை கழித்துவந்தான். செல்லிடப்பேசியோடு கழிக்கும் நேரம் நள்ளிரவுவரைகூட நீண்டிருந்தது. பெற்றோர் இருவரும் பிரிந்திருந்தனர்.
தாயுடன் சிறுவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் செல்லிடப்பேசியில் நேரத்தை கழித்ததால் ஆத்திரமடைந்த தாய், அவனை நிமான்ஸ் மருத்துவமனையில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு சென்று காட்டிய போது, அந்த சிறுவன் பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடும் நீலப்படங்களைப் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தது தெரியவந்துள்ளது.

செல்லிடப்பேசியில் நீலப்படங்கள், ஆபாசமான புகைப்படங்கள் பார்ப்பது, விடியோ கேம்ஸ் விளையாடுவது, நண்பர்களோடு சாட் செய்வது உள்ளிட்ட பழக்கங்களுக்கு பதின்ம வயதுள்ள குழந்தைகள் அடிமையாகியிருப்பது குறித்து நிமான்ஸ் மறுவாழ்வு மையம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களிடம் வாரந்தோறும் சுமார் 15-க்கும் அதிகமான புகார்கள் வருகின்றன.

இந்த போக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பெங்களூரு மாநகரக் காவல் துறை கண்காணிப்பில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தின் ஆலோசகர் ஒருவர் கூறுகையில், செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் குழந்தைகள் ஆர்வமிகுதியால் பல்வேறு விஷயங்களை ஆராய்கிறார்கள்.

இதுகுறித்து பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். குழந்தைகள் செல்லிடப்பேசியில் என்ன பார்க்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீலப்படங்களை பார்ப்பது, விடியோ கேம்ஸ்கள் ஆடுவது, முகநூல், கட்செவி, புகைப்படங்களை திருத்தியமைப்பது உள்ளிட்டவற்றுக்கு குழந்தைகள் எளிதில் அடிமையாகிவிடுகிறார்கள் என்றார்.

நிமான்ஸ் மருத்துவமனையின் மறுவாழ்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மனோஜ்சர்மா கூறுகையில், சரியான தூக்கமின்மை, போதுமான உடல்பயிற்சியின்மை, உணர்வு மற்றும் நடத்தை ரீதியான சிக்கல்கள், பதற்றம் உள்ளிட்டவை அண்மைக் காலமாக குழந்தைகளிடையே பரவலாக காணப்படுகிறது.

தனிக் குடும்பங்கள் மற்றும் வேலைசெய்யும் பெற்றோரின் குழந்தைகள் செல்லிடப்பேசிக்கு எளிதில் அடிமையாகிவிடுகிறார்கள் என்றார்.

குழந்தைகள் நலக் குழு தலைவர் அனிதாசிவக்குமார் கூறுகையில்,செல்லிடப்பேசிக்கு அடிமையாகும் குழந்தைகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குழந்தைகள் பிற்காலத்தில் வன்முறையாளர்களாக மாறிவிடுவார்கள்.

பெரும்பாலான நேர்வுகளில் சில விஷயங்களுக்காக பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்களை குழந்தைகள் அடித்திருக்கிறார்கள். குழந்தைகளோடு அதிக நேரத்தை பெற்றோர்கள் செலவழிக்க வேண்டும்.

செல்லிடப்பேசியில் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் முன் பெற்றோர்கள் அதிகப்படியாக செல்லிடப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்.

நிமான்ஸ் மருத்துவமனையின் உளவியல் பேராசிரியர் டாக்டர் கிரிஷ்ராவ் கூறுகையில், குழந்தைகள் தற்போது மெய்நிகர் இணைய உலகத்தில் வாழ்கிறார்கள். மெய்மையை ஏற்க குழந்தைகள் மறுக்கிறார்கள். இணையதளத்தில் பார்ப்பதை நம்பும் குழந்தைகள், அவர்களின் நடவடிக்கையை எதிர்க்கும்போது வன்முறையாளர்களாக மாறிவிடுகிறர்கள்.

மத்திய அரசு ஊழியர் ஒருவர் தனது 9 வயது குழந்தைக்கு பிறந்தநாள் பரிசாக செல்லிடப்பேசியை (ஸ்மார்ட்போன்) வழங்கினார். வேலைக்குச் செல்லும் போது வீட்டுப் பணியாளரின் கண்காணிப்பில் குழந்தையை விட்டு சென்றார். நாளடைவில் அந்த செல்லிடப்பேசிக்கு குழந்தை அடிமையாகிவிட்டது. அதைத் தடுக்க செல்லிடப்பேசியை பறித்த போது, தாயை குழந்தை அடித்துள்ளது. பின்னர், அந்த குழந்தையை சரிசெய்ய விடுதியில் பெற்றோர் சேர்த்தனர்.

ஆனால், செல்லிடப்பேசி இல்லாமல் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை விடுதியில் தங்க முடியாமல் 6 மாதங்களில் வீட்டுக்கு வந்துவிட்டது. தற்போது இந்த குழந்தைக்கு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எனவே, குழந்தைகளை ஸ்மார்ட்போனிடம் இருந்து தள்ளியிருக்க வற்புறுத்துங்கள். அப்போதுதான் குழந்தைகளின் இயல்பான, ஆரோக்கியமான உடல்மற்றும் மன வளர்ச்சி சாத்தியமாகும் என்றார்.

Leave a Response