“சரவணன் இருக்க பயமேன்” திரை விமர்சனம்….

saravana
“சரவணன் இருக்க பயமேன்”  இப்படத்தில் கதாநாயாகனாக உதயநிதியும், கதாநாயாகியாக ரெஜினாவும் நடித்துள்ளார் மற்றும் ஒரு காமெடி பட்டாளமே நடித்து உள்ளது.  இப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியுள்ளார்.  இப்படத்தின் கதாநாயகன் உதயநிதி தயாரித்தும் உள்ளார்.  இப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் எழில் படம் என்று சொன்னாலே போதும் கதை குறைவாக இருக்கும் காமெடி அதிகமாக இருக்கும்.  ஆனால் இப்படத்தில் சொல்லணும் என்றால் கதையோ மிகவும் குறைவு. மேலும் இப்படத்தில் கதாநாயகன் உதயநிதி நல்ல முன்னேற்றம்.  இவர் நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி நன்கு முன்னேறியுள்ளார்.  நடிகை ரெஜினா படத்தில் முழுக்க கவர்ச்சியாக உள்ளார்.  படம் என்னவோ மதுரையில் எடுக்கப்பட்டதுதான் ஆனால் நாயகியின் உடையை பார்ப்பதற்கு அயல் நாட்டில் உள்ளதுப்போல் இருக்கிறது. இப்படத்தின் காமெடி பற்றி கூறனும் என்றால் சூரி,யோகி பாபு,ரோபோ சங்கர்,மன்சூர் என்று ஒரு பட்டியல் இடலாம்.  ஆனால் இப்படத்தில் யோகி பாபுவின் காமெடி மட்டும் மக்களை திருப்தி அடைய வைத்துள்ளது.  மற்றவர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் சிரிப்பு வரவைக்க முயற்சிப்பதை பாக்கும் பொது சகிப்புத்தன்மை தான் குறைகிறது. சூரி காமெடி சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை.  ஜாங்கிரி மதுமித்தா எப்போதும் போல் தன்னுடைய நடிப்பிலும் காமெடி வசன உச்சரிப்பிலும் அசத்துகிறார்.  இப்படத்தில் இசையை பொறுத்த வரை ஒன்றும் பெரிதாக சொல்லும்
அளவுக்கு இல்லை.  ஏதோ பழைய படத்தில் உள்ள மெட்டுகளை எடுத்து போட்டது போல் இருக்கு.

இப்படத்தில் கதை ஒரு பாதையாக செல்ல வில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இப்படம் ஆரம்பிக்கும் முதல் கொஞ்சம் நேரம் அரசியல் கதை போல் தோன்றும்.  பின்பு சிறிது நேரம் கழித்து ஹீரோயனை லவ் பன்னுவது போல செல்லும்.    சரி இதான் கதை என்று பார்த்தால் இடைவேளை பிறகு பேய் படம் ஆகிறது.   இப்படி மாறி மாறி குழப்பி படம் பார்ப்பவர்கள் படம் எப்பொழுது முடியும் என்ற அளவுக்கு இருக்கிறார்கள்.  ஆக மொத்தத்தில் படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி சென்றால் ஒரு முறை திரையரங்கில் பார்க்கலாம்.

Leave a Response