திருநங்கைகளுக்கு மெட்ரோ ரயிலில் வேலை…

kochi
கேரளாவில் கொச்சி மெட்ரோ சேவையில் முதல் முறையாக 23 திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருநங்கைகளுக்கு வேலை வழங்குவதில் கேரள அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது பராமரிப்பாளர்கள் முதல் டிக்கெட் கவுண்டர் வரை அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப பல்வேறு பணிகளை திருநங்கைகளுக்கு வழங்கயிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ நிறுவனம் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளில் சரியான பங்கைக் கொடுக்க விரும்புகிறது, ரயில் நிலையங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையே பணிகளில் எந்த பாகுபாடும் அளிக்கப்படமாட்டாது என்று கொச்சி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எலியாஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலே முதல் முறை திருநங்கைகளை ஊழியர்களாகப் பணியில் அமர்த்துவதில் கேரள மெட்ரோ சேவை நிர்வாகம் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response