காவல் துறையில் புகார் கொடுத்த சுசித்ரா…

suchi
கடந்த சில வாரங்கள் முன்பு ட்விட்டர் என்ற சமுக வலைதளங்களில் சிறு சலசலப்பு ஏற்பட்டது, அதாவது பின்னணி பாடகியான சுசித்ரா அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் திரையுலகினர் அந்தரங்கம் வெளி வந்தது. இதனை அடுத்து அவரது கணக்கும் முடக்கப்பட்டது.

இப்பொழுது பாடகி சுசித்ரா அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ர்ளா. அதில் கூறியதாவது:

கடந்த 2.3.2017 அன்று என்னுடைய ட்விட்டர் கணக்கு முகம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டதும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பற்றி அவதூறாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும் சமயத்தில் என் உடல்நிலை சரியில்லாத காரணங்களிளால் என்னால் என்
ட்விட்டர் கணக்கை அளிக்க முடியவில்லை பின்னர் என் கணவர் கார்த்திக் குமார் அவர் ட்விட்டர் பக்க தலைமையகம் தொடர்புகொண்டு என்னுடைய ட்விட்டர் கணக்கை முழுமையாக முடக்கினார்.
என்னுடைய ட்விட்டர் முடக்கிய சில மணிநேரங்களில் 40-50 போலி கணக்குகள் துவக்கப்பட்டன. அந்த போலி ட்விட்டர் கணக்குகளில் இருந்து எரிச்சலூட்டும் வகையில் பதிவுகளை போட்டு வந்தனர். அதில் சில

http://twitter.com/suchifanleaks
http://twitter.com/suchireal
http://twitter.com/i am suchitra karthick

மேலும் என்னுடைய மின்னஞ்சல்கள் suchithra.r@gmail.com, singersuchi.@gmail.com ஏப்ரல் முதல் வாரத்தில் என்னுடைய இந்த இரண்டு மின்னஞ்சல்களில் இருந்தும் ஒரு சினிமா பிரபலத்திற்கு அருவெறுக்க தகுந்த மின்னஞ்சல்கள் யாரோ ஒருவர் மூலம் அனுப்ப பட்டது தெரிய வந்தது.

எனவே என்னுடைய போலி ட்விட்டர் கணக்குகளையும், மின்னஞ்சல்களையும் அத்துமீறி அபகரித்து உள்ளவர்களையும் (hack) மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு கொடுத்துள்ளார்.

Leave a Response