பேனாசோனிக் அறிமுகபடத்தும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள்…..

saravana
ஜப்பானின் பிரபல மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான பேனாசோனிக், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையை துவங்கியது. முதலில் உயர் ரக ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வந்த பேனாசோனிக், சமீப காலமாக நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் விலை குறைவான ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மாதம் விலை குறைவான எலுகா ரே மற்றும் பி 85 ஆகிய இரு வகையான புதிய ஸ்மார்ட் போன்களை பேனாசோனிக் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. எலுகா ரே 7,999 ரூபாயும், பி 85 6,499 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ஸ்மார்ட் போன்களும் வரும் மே 15-ஆம் தேதி பிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு வர உள்ளன.

எலுகா ரே -வை பொறுத்த வரை 5 அங்குல ஹெச்.டி டிஸ்பிளே, 1.3 GHz MTK குவாட் கோர் பிராசசர், 3 ஜிபி ராம், 16 ஜி.பி ரோம் மற்றும் 64 ஜி.பி வரையிலான எக்ஸ்பாண்டபிள் மெமரி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மாலோ இயங்குதளத்தில் செயல்படக் கூடிய இந்த ஸ்மார்ட் போன், 4,000 mAh திறனுள்ள பேட்டரியை கொண்டுள்ளது. 4ஜி வசதி, 13 எம்.பி கேமிரா, 5 எம்.பி செல்பி கேமிரா ஆகியவையும் இந்த ஸ்மார்ட் போனில் இடம்பெற்றுள்ளன.

பி 85 ஸ்மார்ட் போனை பொறுத்த வரை, 5 அங்குல ஹெச்.டி திரை, 1.0 GHz குவாட் கோர் பிராசசர், 2 ஜிபி ராம் மற்றும் 16 ஜி.பி ரோம், 2 எம்.பி செல்பி கேமிரா, 16 ஜி.பி கேமிரா, 4,000 mAh திறனுள்ள பேட்டரி , இரட்டை சிம் வசதி, வை-ஃபை மற்றும் புளூ டூத் ஆகிய அம்சங்கள் உள்ளன.

Leave a Response