பாகுபலி3 உற்சாகம் இயக்குனர் ராஜமவுலி!..

pagupali
இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி என்ற கதையை வைத்து, 2 பாகங்களை இயக்கி, இந்திய அளவில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த வரிசையில், அவர் 3வது பாகத்தையும் படமாக எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இதுபற்றி டுவிட்டரில் ஏற்கனவே ராஜமவுலி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். கடந்த 2015ம் ஆண்டே, அவர் “பாகுபலி 3” எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது தந்தை இதற்கான கதையை தயார்செய்துவிட்டால், படம் நிச்சயம் எடுக்கப்படுவது உறுதி,’’ எனக் கூறியுள்ளார்.

இதனால், பாகுபலி 3 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என, ராஜமவுலி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Response