ரத்து செய்யப்பட்ட அ.தி.மு.க. பேச்சு…?

admk 1
அதிமுக அம்மா மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இடையே பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று (ஏப்.24) காலையில் ஓ.பி.எஸ்., அணி தரப்பை சேர்ந்த முனுசாமி அளித்த பேட்டியில் ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணையும், சசிகலா நீக்கமும் எங்களின் முக்கிய நிபந்தனை. ஆனால் அந்த அணி தரப்பில் ஒவ்வொருவரும் ஒரு வித கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு, அந்த தரப்பு அணியை யாரோ வெளியில் இருந்து இயக்கு இயக்குகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

முனுசாமி பேட்டி அளித்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு பேட்டி அளிக்கப்பட்டது. இரு அணிகள் இணைவது தொடர்பாக முதல்வர் தரப்பை சேர்ந்த குழுவின் தலைவரான வைத்திலிங்கம் நிருபர்களை சந்தித்தார். இவர் பேசுகையில்.

அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு இப்போதே நிருபர்கள் மூலம் கேட்டு கொள்கிறேன். ஆனால் முனுசாமி அளித்த பேட்டியில் இரண்டு நிபந்தனை வைக்கிறார். ஜெ., மரண குறித்த விசாரணை மற்றும் சசி பொது செயலர் பதவி பறிப்பு ஆகியன. இரண்டும் முறையே கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் முன்பு உள்ளது. இதன் மூலம் வரும் முடிவின்படியே முடிவுகள் எடுக்கப்படும். பேச்சு வார்த்தைக்கு வருகிறீர்களா என நான் மனோஜ் பாண்டியனிடம் போனில் கேட்டேன். ஆனால் பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை என மனோஜ் பாண்டியன் எங்களிடம் கூறி விட்டார்.

பேச்சு வார்த்தைக்கு முன்பே நிபந்தனை வைத்தால் முட்டுக்கட்டை ஏற்படும். நிபந்தனை வைப்பதுடன், ஓ.பி.எஸ்., அணியினர் மாறி மாறி பேசி வருகின்றனர். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.

இதனை தொடர்ந்து இரு அணிகள் இணைப்பு பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Response