சிலுக்குவார்பட்டி சிங்கமாக விஷ்ணு விஷால்!..

silukku
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஓபனிங் சாங் தற்போது படமாக உருவாகி வருகிறது. ஜில்லாவோ திண்டுக்கல், சின்னாளம்பட்டி பக்கம் சொல், நம்ம சிலுக்குவார்பட்டி சிங்கம், செம்பு கலக்காத தங்கம் என்று தொடங்கும் பாடலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்பதை விஷ்ணு விஷால் தன்னுடைய படத்திற்கு படத்தலைப்பாக சூட்டியிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாநகரம் புகழ் ரெஜினா நடிக்கிறார். இயக்குனர் எழிலின் உதவியாளராக பணியாற்றிய செல்லா இப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் கதாநாயகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது. வரும் ஜூன் 23ம் தேதி இப்படம் திரைக்கு வரயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response