நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இந்தத் திரைப்படம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.
செல்லா அய்யாவு இப்படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணுவே இதனைத் தயாரிக்கிறார். இப்படம் வரும்21ம் தேதி வெளியாகும் நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் ரெஜினா, ஓவியா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க, யோகிபாபு, ஆனந்தராஜ், கருணாகரன்,வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ராட்சசன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த விஷ்ணுவுக்கு , இப்படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்