மைனா நந்தினியின் கணவர் தற்கொலை…

mainaa nandhini
சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்தினி. அதன் பிறகு வம்சம், ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு-5 நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்ல தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மற்றும் டார்லிங் டார்லிங் தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு தன்னை பெண் பார்க்க வந்த கார்த்திகேயன் என்பவரை முதலில் பிடிக்கவில்லை என்று சொல்லி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகும் நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Response