நல்ல கதை வைத்திருந்த இயக்குனர் ஒருவரை தமது வசம் ஈர்த்துக்கொண்ட இயக்குனர் பாலா!..

bala
நல்ல திரைக்கதைகள் எங்கிருந்தாலும் அதை தேடி தேடி எடுத்து வந்து படமாக்கி அவர்களுக்கு பெருமை தேடித் தருவதை வாடிக்கையாக கொண்டவர் வெற்றிமாறன். அப்படி வெற்றிமாறன் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கதையை தற்போது பாலா இயக்கவுள்ளார்.

சாட்டை யுவனை வைத்து படம் துவங்கிய பாலா ஒரிஇரண்டு நாட்கள் படபிடிப்பை நடத்தியவர் அது சரி வராது என நிறுத்தி விட்டார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒரு இயக்குனரிடம் நல்ல கதை இருப்பதை அறிந்து கொண்ட வெற்றிமாறன் அவரை தன் வசம் வைத்திருந்தார். ஆனால் அவரின் தற்போதைய நிதி நிலைமை சரியாக இல்லாத காரணத்தால் அப்படத்தினை தாம் பின்னர் இயக்கலாம் என காலம் தாழ்த்தினார்.

இச்செய்தியை அறிந்த கொண்ட இயக்குனர் பாலா அந்த இயக்குனருக்கு கணிசமான ஒரு தொகையை கொடுத்து விட்டு கதையை வாங்கி அந்த இயக்குனரை தன்வசப்படுத்திக் கொண்டாராம்.

Leave a Response