“கவண்” – திரை விமர்சனம்

Kavan-title-look
கவண் – திரை விமர்சனம்,

சினிமா வகை : லவ், சென்டிமென்ட், க்ரைம் டிராமா…

இயக்கம் : கே.வி.ஆனந்த், படத்தொகுப்பு: ஆண்டனி இசை:ஹிப் ஹோப் தமிழா ஆதி ஒளிப்பதிவு

நட்சத்திரங்கள்: விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர், விக்ராந்த், சாந்தினி தமிழரசன், ஆர்.பாண்டியராஜன், ‘செம்புலி ‘ஜெகன், போஸ் வெங்கட், ஆகாஷ் தீப் சாய்கல்….

நங்கள் சமுக அக்கறையோடுதான் இருக்கிறோம் என்ற தம்பட்டம் அடித்து கொண்டு எல்லா பிரச்சனைகளில் பப்லி சிட்டி தேடநினைக்கும் ஒரு சில தனியார் டி.வி.சேனல்களின் போலி முகத்தை தோலுரித்து கட்டும் கதைகருவாக உருவாகிய படம் தான் “கவண்”

இப்படத்தில் திரைப்பட கலைக்கல்லூரியில் பயின்ற விஜய் சேதுபதி-மடோனா செபஸ்டியன் ஜோடிகளுடன் ஜெகன் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சில குறும்படங்களை உருவாக்கினார்கள் இக்குறும்படம் பெரிதாக போனியகததல் இவர்கள் அனைவரும் மீண்டும் ஒரு பிரபல தனியார் சேனலில் முன் பின் வேலைகளாக இருந்தாலும் அந்த வேளையில் சேர்ந்தனர்.இந்நிலையில், அடாவடிகள் பல செய்து பெரும் அரசியல்வாதியான போஸ் வெங்கட்டின் போலி முகத்தை விஜய் சேதுபதி ரகசியமாக தன் காமிராவில் பதிவு செய்ய, அதை தங்கள் டி.வியில் போட்டுக் காட்டி, வெங்கட்டின் போலி புகழுக்கு ஊறுவிளைவிக்கும் அந்த பிரபல தனியார் டி.வி, ஒரு கட்டத்தில், வெங்கட்டோடு சமரசம்’ பேசி, அவரை பெரிய அளவில் கொண்டாட முயற்சிக்கிறது. அதுவும் விஜய் சேதுபதியை விட்டே, அதை பக்காவாக செய்ய நினைக்கும் அந்த சேனல் நிர்வாகத்தை எதிர்த்து மடோனா செபாஸ்டியன், ஜெகன்.. ஆகிய, தன் நண்பர்களுடன் வெளியேறும் விஜய் சேதுபதி, முத்தமிழ் டி.வி எனும் பெயரில் போனியாகாத டி.வி சேனல் நடத்திக் கொண்டு, வருமானத்திற்கு மூலிகை மருத்து வியாபாரம் செய்து வரும் டி.ஆரோடு கைகோர்த்துக் கொண்டு, எப்படி? ‘தகிடுதத்த’ தனியார் டி.வி உரிமையாளரையும், அடாவடி அரசியல்வாதியையும் போட்டு பொளந்து கட்டுகிறார் என்னும் கதையுடன் . விஜய் சேதுபதி – மடோனா செபாஸ்டியனின் காதல் கலாட்டாக்களையும் கலந்து கலக்கலாக வந்திருக்கும் படம் தான் “கவண்”.

மேலும் இப்படம் விறுவிறுபானா கதையாக உள்ளது. இப்படத்தை அனைவரும் திரை அரங்குகளில் சென்று பார்த்து மகிழுங்கள்.

Leave a Response