பழைய மாசு தரநிலை கொண்ட வாகனமா? சுப்ரீம் கோர்ட் உத்திரவினால் உஷாராக இருங்கள்…

maasu
தற்போது நம் உலகில் பெருகி வரும் வாகன மாசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் 4-வது தர மாசு நெறிமுறைகளின் படி வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புதிய தரநிலை ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே பழைய தரத்தில் அதாவது மாசு தரம் 3 மற்றும் 2-ன் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை 1-ந்தேதிக்கு மேல் விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாசு தரம்-4 நெறிமுறைகளின் படி தயாரிக்காத வாகனங்களை அதாவது 3 மற்றும் 2-வது தரம் கொண்ட வாகனங்களை 1-ந்தேதி முதல் விற்கவும், பதிவு செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

பின்னர் வாகன தயாரிப்பாளர்களின் நலன்களை விட எங்களுக்கு கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கியமே முக்கியம் என்று இரண்டு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Leave a Response