கொரோனா நோய் தடுப்புப்பணிக்கு மேலும் 1, 239 மருத்துவர்கள் – முதலமைச்சர் பழனிசாமி..

கொரோனாவுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பை முடித்த 574 முதுநிலை மருத்துவ மாணவர்களை, மாத ஊதியம் 75 ஆயிரம் ரூபாய் வீதத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாத ஊதியம் 60 ஆயிரம் ரூபாய் வீதத்தில் 665 மருத்துவர்களையும் பணியமர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் 365 ஆய்வக நிபுணர்களையும், ஆயிரத்து 230 சுகாதார பணியாளர்களையும் நியமனம் செய்ய முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இவர்கள் 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response