கொரோனா பாதிப்பு உயிரிழப்புகளை அரசு மறைக்கவில்லை – எம்.ஆர்.விஜயபாஸ்கர்..

ஆலந்தூர், வளசரவாக்கம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களுக்கு கொரோனா தடுப்பு பிரிவு பொறுப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் நேற்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா சிறப்பு  முகாமில்  ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆலந்தூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை நேரில் பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 476 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 படுக்கைகள் அவசரத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 5 இடங்களில் மருத்துவமுகாம் நடைபெறுகிறது. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால், பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போதிய  இடவசதி யோடு 160 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டலங்களில் 2.25 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் கொரோனா வைரஸ் அதிகரித்துதான் குறையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை அரசு மறைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response