மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்: ஆர்.கே. நகர்

madhu_ops
மறைந்த ஆ.இ.அ.தி.மு.க. வின், முன்னால் முதல்வரும் பொது பொதுசெயலாளருமான, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தற்பொழுது காலியாக உள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 12 ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்தவர்களில் 70 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

ஆர்.கே. நகர் தொகுதியில் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீனவர் காலனியில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சி சார்பில் மதுசூதனன் போட்டி யிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதுவண் ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் மீனவர் காலனி பகுதியில் நேற்று மாலை பிரச் சாரம் செய்தார். அவர் அப்பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பூண்டித்தங்கம்மாள் தெருவில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவில் முன்பு மதுசூதனனை ஆதரித்து பன்னீர்செல்வம் பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருக்கு மாற்று வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் மதுசூதனன். ஜெயலலிதாவால் விரட்டி யடிக்கப்பட்ட தினகரன் இன்று, ஜெயல லிதாவின் அன்பைப் பெற்ற மதுசூதனனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்யும் கும்பலை ஒழிக்க ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவரை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்து வேட் பாளர்களும் டெபாசிட் இழக்கும் வகையில் மாபெரும் வெற்றியை எங்களுக்குத் தர வேண்டும் என்று o.பன்னீர்செல்வம் கேட்டுகொண்டேர்.

மேலும் ஜெயலலிதாவின் அவர்களின் மர்ம மரணம் ஆறாத வடுவாக நம் மனதில் உள்ளது. அவரது மர்ம மரணத்தில் உள்ள முடிச்சு அவிழும் வரை எங்களின் தர்ம யுத்தம் தொடரும் என்றார்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் மதுசூ தனன், முன்னாள் அமைச்சர் பாண்டிய ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Response