பாகுபலி-2 டிக்கெட்டுகள் அனைத்தும் 6 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது!..

bahubali
இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி-2 படம், ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் படம் வெளிவரும் நாளுக்கு முந்தைய நாளின் பிரீமியர் ஷோ காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் துவங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள பாகுபலி-2 படத்தின் பிரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு துவங்கியது. மொத்தம் 450 டிக்கெட்டுகள் விற்பனைக்கு இருந்தன. இதன் விலை அதிகமாக இருந்தாலும், முன் பதிவு துவங்கிய 6 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

இதனை சற்று எதிர்பார்க்கவில்லை என பாகுபலி-2 படத்தின் ஆஸ்திரேலிய நாட்டிற்கான விநியோகஸ்தர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் படம் வெளியாகும் அன்று 370 டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Response