எங்கிட்ட மோதாதே -விமர்சனம்

natty
எழுத்து இயக்கம் – ராமு செல்லப்பா
நட்ராஜ், ரஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர்.

“எங்கிட்ட மோதாதே” தமிழ் சினிமாவின் பொற்காலத்தை கண் முன் நிறுத்துகிறது. கமல், ரஜினி படங்கள் கோலோச்சிய 80 களில் கமல், ரஜினி கட் டவுட் வரையும் இரு நண்பர்களின் வாழக்கை அரசியலில் மாட்டி திசை திரும்புவது தான் கதை.

80 களின் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், அவர்களின் வாழ்வில் கல்ந்த சினிமா வெறி அனைத்தையும் கண்முன் நிறுத்தும் திரைக்கதை.

கட்டவுட் கலாச்சாரம், அதன் வாழ்வியல் அதன் பொன் உள்ள அரசியல், ரஜினி, கமல் ரசிகர்களின் வாழ்க்கை என பயணிக்கும் திரைக்கதை நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. அந்த பொற்காலத்தை கண்முன் பார்ப்பதே ஏகாந்தமாகி விடுகிறது.

ரஜினி ரசிகராக நட்டி ரஜினி மேனரிசத்துடன் கலக்குகிறார். ராதாரவியுடன் அவர் மோதும் தியேட்டர் காட்சியில் ரஜினி, கமல் ரசிகர்களின் பலம் பற்றி சொல்லும்போது கைத்தட்டல் பறக்கிறது. கோண இளைஞனாக, ரஜினி ரசிகனாக நட்டிக்கு மற்றுமொரு வெற்றிப்படம்.

ராஜாஜி அடக்கமான நண்பனாக வருகிறார். பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். இரு கதானாயகிகளுக்கும் வேலை குறைவு. ஒண்லைன் காமெடிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் முருகானந்தம். ராதாரவி வில்லன் பாத்திரம் எளிதாய் மிரட்டுகிறார்.

திருநெல்வேலியின் 80 களின் வாழ்கையை அத்தனை துல்லியமாக் கொடுத்ததில் கவனம் அள்ளுகிறார் இயக்கிநர் ராமு. படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலும் நேர்த்தியை பொருத்தியதில் முக்கிய இயக்குநராக முத்திரை பதித்திருக்கிறார் ராமு. எந்த இடத்திலும் தொய்வில்லா திரைக்கதை படத்தை தூக்கி நிறுத்துகிறது.

இசை பல இடங்களில் சில படங்களை ஞாபகப்படுத்துகிறது. கவனித்திருக்கலாம். கேமரா 80 களின் நிறத்தை கொண்டு வந்திருக்கிறது.

சினிமாவின் பொற்காலத்தை தரிசிக்க ” என்கிட்ட மோதாதே” கண்டிப்பாக பார்க்கலாம்.

Leave a Response